உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பயம் ஆட்டிப்படைத்துக்
கொண்டிருக்கிறது. மக்கள் ஒன்றாகக் கூடும் இடங்களில் இது வேகமாகப்
பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரித்ததால், சுற்றுலா
தலங்களில் பொது மக்களின் வருகைக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு
வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆனால், தஞ்சை பெரிய கோயிலிலோ மக்கள் கூட்டம்
வழக்கம்போல் அலைமோதியது. இதைச் சுட்டிக்காட்டி விகடன் இணையத்தில் செய்தி
வெளியிட்டோம். இதன் எதிரொலியாகத் தஞ்சை பெரியகோயில் மார்ச் 31-ம் தேதி வரை
தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

உலகப்
புகழ்பெற்ற பாரம்பர்ய சின்னமும், வழிப்பாட்டுத்தலமுமான தஞ்சை
பெரியகோயிலில் எப்போதுமே மக்கள் வருகை அதிகமாக இருக்கும்.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான
பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்கிறார்கள். கடந்த
பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்ற பிறகு, பெரியகோயிலைத் தரிச்சிக்க
வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.
`பக்தர்கள் கூட்டம்; பெயரளவில் முகாம்!'- அலட்சியம் காட்டுகிறதா தஞ்சைப் பெரியகோயில் நிர்வாகம்? #Corona
சனி,
ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்கள் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் மக்கள்
கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த அச்சம்
நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், பெரியகோயில் நிர்வாகமும் தஞ்சை மாவட்ட
நிர்வாகமும் இதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென தஞ்சை பொதுமக்களும்
சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினார்கள்.
மக்களின் வருகையை
தவிர்க்கும் விதமாக, தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள மற்ற வழிபாட்டுத்தலம்
மற்றும் சுற்றுலா தலங்களையும் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டோம். இது
வாட்ஸ் அப் குரூப்களில் வைரலானது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட
ஆட்சியர் கோவிந்தராவ், ``கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்
மாவட்ட நிர்வாகம் தீவிரமாக உள்ளது. பெரியகோயிலுக்கு உள்ளேயேயும் கொரோனா
விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செஞ்சிருக்கோம்.
ஆனாலும் கூட,
பொதுமக்களின் வருகையை தவிர்க்கணும்னு சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தமிழக
அரசின் உயர் அலுவலர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத்
தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முதல் மார்ச் 31-ம் தேதி வரை தஞ்சை
பெரியகோயில் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், பொது மக்கள் வருகையைத்
தவிர்க்குமாறும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment