
கடையநல்லூர் பகுதியில் வேறு வழியின்றி சுற்றித் திரிந்த 15 ஆதரவற்றவர்கள் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி
மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்த பலர் ஆதரவற்ற நிலையில் சாலை ஓரத்தில்
முடங்கிக் கிடப்பதாக கடையநல்லூர் வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து வட்டாட்சியர் அழகப்பராஜா, நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி,
சுகாதார அலுவலர் நாராயணன், ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி உள்ளிட்டோர்
அங்குச் சென்று அவர்களைப் பத்திரமாக அழைத்துச் சென்று அரசுப் பள்ளியில்
தங்க வைத்தனர்.
மேலும், அவர்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கவும் வட்டாட்சியர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதில் சிலர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment