
துபாயிலிருந்து நேற்று மாலை மதுரைக்கு விமானம் மூலம் வந்த தென்
மாவட்டத்தைச் சேர்ந்த 143 பேரும் கொரோனா சிறப்பு முகாமில் மருத்துவர்களால்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா
தொற்றை தடுக்கும் வகையில் மதுரை விமான நிலையத்தில் மருத்துவத்துறையினர்
விழிப்பாக இருந்து செயல்பட்டு வருகிறர்கள்.
அந்த வகையில் நேற்று மாலை துபாய் விமானத்தில் மதுரைக்கு
வந்திருந்த 143 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களில்
யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனால்
தாங்கள் ஊருக்குக் கிளம்புவதாகப் பயணிகள் கூறினார்கள். ஆனால், அவர்களை
தடுத்த அதிகாரிகள், கொரோனா பாதிப்பு இல்லாவிட்டாலும் வெளிநாட்டிலிருந்து
வருகிறவர்களை 15 நாள்கள் தனிமைப்படுத்திக் கண்காணிப்பில் வைத்திருக்க
வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு நீங்கள் ஒத்துழைக்க
வேண்டும் என்று அவர்களிடம் கூறினர்.
கொரோனா
பாதிப்பே இல்லாமல் நாங்கள் ஏன் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று
ஒத்துக்கொள்ளாமல் பயணிகளும் அவர்களை அழைத்துச் செல்ல வந்தவர்களும்
அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டது.
அதன் பின்பு விமான நிலைய அதிகாரி செந்தில்வளவன்,
டி.எஸ்.பி அருண், ஆர்.டி.ஓ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு மணி
நேர வாக்குவாதத்திற்குப் பின் அவர்கள் வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொள்ள
அருகிலுள்ள இரண்டு சிறப்பு முகாம்களுக்குப் பேருந்துகளில் அழைத்துச்
செல்லப்பட்டனர்.
துபாய் பயணிகள்
15 நாள்கள் கண்காணிப்புக்குப்பின்
அதில் எந்தப் பிரச்சனையும் இல்லாதவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்
என்று அதிகாரிகள் கூறினார்கள். மருத்துவக்குழு அவர்களை சிறப்பான முறையில்
கவனித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment