
விருதுநகர்: எம்.ஜி.ஆர்., கையை பிடித்து வந்தவர்கள் தான் அதிமுக.,வினர்
என்றும், அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் அல்ல என்றும்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள சுந்தரபாண்டியம் பகுதியில் மறைந்த முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து
கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூட்டத்தில் பேசியதாவது: ஜெயலலிதாவிற்கு
72 வயது, எம்.ஜி.ஆர்.,க்கு 103 வயது என சொன்னால் நம்ப முடிகிறதா? இறக்கும்
வரையில் அடிமைப்பெண் படத்தில் நடித்தது போல் இருந்தார் எம்.ஜி.ஆர்.,. வயதான
தோற்றத்தில் அவரை பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் விதி வசத்தால்
ஜெயலலிதா இறந்துவிட்டார்.திமுக தலைவர் ஸ்டாலின், மதக்கலவரத்தை தூண்டிவிட்டு
ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்.
குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்கள் யாராவது
பாதிக்கப்பட்டார்களா என முதல்வர் பழனிசாமி கேட்டதற்கு பதில் கூறாமல்
சட்டசபையில் இருந்து ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். அதிமுக.,வினர் காந்தி
கையை பிடித்து வந்தவர்கள் அல்ல, எம்.ஜி.ஆர்., கையை பிடித்து வந்தவர்கள்.
அதனால் வீரத்தோடு தான் இருப்போம். அமைதியாக இருக்க நாங்கள்
காங்கிரஸ்காரர்கள் கிடையாது. அதிமுக., காரன், விசில் அடிப்பான், சவுண்டு
விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்து எறிவான். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment