
தமிழகம் முழுவதிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன்
தொடர்புடைய நபர்களை என்.ஐ.ஏ புலனாய்வுத் துறையினர் விசாரித்து கைது செய்து
வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்த
காஜாமொய்தீன் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்த நிலையில்
மாவட்டத்தில் நெய்வேலி, பட்டாம்பாக்கம், பரங்கிப்பேட்டை, புத்தூர் ஆகிய
பகுதிகளில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.
கடலூர்
மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் female
nursing assistant- ஆக பணிபுரிந்து வருபவர் இந்திரா காந்தி. இவர் எஸ்.ஐ
வில்சன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட காஜா மொய்தீனின் நான்காவது மனைவி.
இந்நிலையில் நெய்வேலி வட்டம்- 7ல் உள்ள 9 C என்ற வீட்டில்
தங்கியிருந்த காஜா மொய்தீன் காதல் மனைவி இந்திரா காந்தி வீட்டில் காலை
05.30 மணியில் இருந்து என்.ஐ.ஏ டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் தீவிர
சோதனையில் ஈடுபட்டனர்.
காஜா மொய்தீன் நான்காவது மனைவி என்பதால்,
கொலை தொடர்பாகவும், தீவிரவாத. நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆவணங்கள்
வீட்டில் உள்ளதா என பல்வேறு கோணங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
நடத்தினர். பின்னர் செல்போன், டேப் உள்ளிட்ட 8 பொருட்களை அதிகாரிகள்
கைப்பற்றி காலை 10.15 மணி அளவில் சோதனை முடித்து சென்றனர்.
தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment