கொழும்பு: தனியார் விமான சேவை ஆரம்பம் ஆனது... கொழும்புக்கும்
யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான முதலாவது தனியார் விமான சேவை இன்று
ஆரம்பிக்கப்பட்டது.
இரத்மலானையில்
இன்று (சனிக்கிழமை) காலை புறப்பட்ட விமானம் 9 மணியளவில் பலாலி யாழ்ப்பாணம்
சர்வதேச விமான நிலையத்தினை சென்றடைந்தது. FITS AIR விமான சேவையின் ATR-72
விமானம் 45 பயணிகளுடன் 9 மணிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை
சென்றடைந்து 31 பயணிகளுடன் 10.50 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டுச்
சென்றது.
இன்று முதல், வாரத்தில் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் FITS AIR விமானசேவை இடம்பெறும்.
இரத்மலானையில் இருந்து காலை 7.30 மணிக்கும் பலாலியில்
இருந்து 9.30 மணிக்கும் விமான சேவை இடம்பெறும். ஒரு வழிக் கட்டணமாக 7500
ரூபாய் அறவிடப்படுகின்றது என FiTs AiR விமான சேவையின் முகாமையாளர்
குலசிங்கம் வசீகரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில்
விமான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விமான சேவை
முன்னெடுக்கப்படுவதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்பும்
சௌபாக்கியம் மிக்க நோக்கு என்ற கொள்கை அறிவிப்புக்கு அமைய உள்நாட்டு விமான
சேவைகளை விரிவுபடுத்த உறுதிபூண்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சின்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் இடம்பெறும்
நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த உள்நாட்டு விமான சேவைகள்
முன்னெடுக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment