
16 வயதிலே படத்தில் வரும் முதுகு தேய்க்கும் காட்சி பரட்டை, சப்பாணி
போல ரஜினியும் கமலும் பா.ஜ.க-வுக்கு முதுகு தேய்த்து விடுகின்றனர் என்று
இயக்குநர் கௌதமன் விமர்சனம் செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க இயக்குநர் கௌதமன் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
"டெல்லி போராட்டத்தில் 39 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஒரு போலீஸ்காரர் உடலில் இருந்து காவல்துறை சுட்ட துப்பாக்கி குண்டை எடுத்துள்ளனர். அப்படியானால் வன்முறையைத் தூண்டியது யார் என்பது வெளி உலகிற்கு நன்கு தெரியும். வன்முறையாளர்களை கைது செய்யுமாறு கூறிய நீதிபதியை ஏன் மாற்றினார்கள்?
நிதிஷ் குமார், புதுச்சேரி நாராயணசாமி உள்ளிட்ட முதல்வர்கள் இந்த சட்டத்தை
ஏற்க மாட்டோம் என்று சொல்லிவிட்டனர். ஆனால், தமிழக சட்டப்பேரவையில்
தீர்மானம் கொண்டுவர தயக்கம் காட்டுகிறார்கள். நாங்கள் ஓட்டுப் போட்டு
கோட்டைக்கு அனுப்பிய அரசு ஏன் தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. உயிர்பலிகள்
போதும்... இந்த சட்டத்தை திரும்பப்பெறுங்கள். இல்லை என்றால் ஜல்லிக்கட்டு
போராட்டம் வென்றதுபோல இஸ்லாமியர்களும் இந்த போராட்டத்தை வென்றெடுப்பார்கள்.
தமிழகத்தில் ரஜினி, கமல் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ௧௬
வயதினிலே படத்தில் வரும் பரட்டைக்கு சப்பாணி முதுகே தேய்த்துவிடும் காட்சி
போல, ரஜினிகாந்தும் கமலும் பாரதிய ஜனதா கட்சிக்கு முதுகு தேய்த்து
விட்டுக்கொண்டிருக்கின்றனர்" என்றார்.
No comments:
Post a Comment