
புதுடில்லி: மீண்டும் தலைவராகிறார்... வரும் ஏப்ரல் மாதம், காங்.,
கட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த,
மே மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் பரிதாபமான தோல்வியைத்
தழுவியது. இதையடுத்து, கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார்.
தற்போது, சோனியா, இடைக்கால தலைவராக உள்ளார். நிரந்தர தலைவரை நியமிக்க,
கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.
காங்கிரஸ்
தலைவர் பதவி குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து உலா வரும் நிலையில்
அப்பதவிக்கு இருக்கும் ஒரே போட்டியாளராக ராகுல் பார்க்கப்படுகிறார்.
ஒட்டுமொத்த கட்சியும் அவரே தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என விரும்புவதாக காங். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும்
ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்., காரிய கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து கட்சித்
தலைவராக ராகுல் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment