
டெல்லி வன்முறை குறித்து ரஜினிகாந்த் பேசியது, பாஜகவை
காப்பாற்றுவதற்காக சொல்லப்பட்ட கருத்து என, மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்
தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன் ரஜினி செய்தியாளர்களுக்கு
அளித்த பேட்டியில், "டெல்லி கலவரத்தை அடக்காதது மத்திய உளவுத்துறையின்
வீழ்ச்சி. அது உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. இதனை வன்மையாகக்
கண்டிக்கிறேன். இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள்" என தெரிவித்தார்.
மத்திய
அரசை எதிர்த்துப் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்
கமல்ஹாசன் உட்பட பல்வேறு தரப்பினர் ரஜினியின் கருத்தை வரவேற்றனர்.
அதேசமயத்தில்,
மத்திய அரசை கண்டிப்பது ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என, தமிழக
பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ரஜினியின் கருத்து குறித்து இன்று
(பிப்.28) விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர்
ரவிக்குமார், "டெல்லியில் நடைபெறும் பிரச்சினைகளுக்குக் காரணம் உளவுத்துறை
தோல்வி என ரஜினி சொல்கிறார்.
அங்கே ஏற்பட்டுள்ள பிரச்சினை,
திட்டமிட்ட முறையில் அரசியல் ரீதியாக தூண்டி விடப்பட்ட ஒன்று. அதை முற்றாக
மறைத்துவிட்டு, ஏதோ உளவுத்துறை, காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பது
போல சுருக்குகிறார். இது பாஜகவை காப்பாற்றுவதற்காக சொல்லப்படுகிற கருத்து"
என தெரிவித்தார்.
No comments:
Post a Comment