சென்னை: 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தது போல
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் தமிழக அரசு எதிர்க்க வேண்டும்
என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5,8-ம்
வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு
அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு
எழுந்தது.
இதனையடுத்து இன்று காலை நடைபெற்ற தமிழக அமைச்சரவைக்
கூட்டத்தில் 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு
செய்யப்பட்டது. தமிழக அரசின் இம்முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள்,
ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
திமுக
தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5, 8ஆம் வகுப்பு
பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க தொடக்கம் முதலே
வலியுறுத்தி வந்தது.
அதற்குச் செவி மடுக்க மறுத்த அதிமுக அரசு, தற்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டு ரத்து செய்துள்ளது.
இதிலேனும் அதிமுக அரசு உறுதி காட்டுவதோடு #NewEducationPolicy -யையும் எதிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
இதேபோல்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், 5 மற்றும்
8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் மீதான
அழுத்தம், சுமை நீக்கப்பட்டுள்ளது. இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என
தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா
நடிகர்
சூர்யா தமது ட்விட்டர் பக்கத்தில், படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை
மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினாமனதென்று அகரம் தன் களப்
பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்
தேர்வு என்றும் தீர்வாகாது. 5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள்
ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும் தமிழக
அரசுக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment