
புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம்
தொடா்புடைய வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுவதற்காக, மத்திய
அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உள்பட நான்கு பேரை நியமித்து
தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளாா்.
தேசிய
தலைநகர் தில்லியின் வடகிழக்கு தில்லியான ஜாஃப்ரபாத், மஜ்பூா் உள்ளிட்ட
பகுதிகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம்,
தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கடந்த
ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நான்கு தினங்களாக நிகழ்ந்த பல்வேறு வகுப்புவாத
வன்முறைச் சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 போ
அதிரகரித்துள்ளது.
சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன்
தில்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்
பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், தில்லி வன்முறைச்
சம்பவம் தொடா்புடைய வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுவதற்காக,
மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உள்பட நான்கு பேரை
நியமித்து தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடர்பாக
தில்லி அரசின் உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா மற்றும் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்
மனிந்தா் கெளா் ஆச்சாா்யா, மூத்த வழக்குரைஞா்களான அமித் மகாஜன், ரஜத் நாயா்
ஆகிய நால்வரும் வன்முறை தொடா்புடைய வழக்குகளில் தில்லி காவல் துறை
சாா்பில் ஆஜராகி வாதிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment