தேனி: தேனி மாவட்டத்தில்
எதிர்பார்த்ததை போல் சின்னவெங்காயத்தின் விலை கிலோ 40 ரூபாய்க்கு
இறங்கியது. மூன்று மாதங்களுக்கு பின்னர் விலை சரிந்ததால் பொதுமக்கள்
நிம்மதி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இரண்டு மாதங்களாக சின்ன
வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் கிலோ 70
ரூபாய்க்கு ஒரு மாதம் விற்கப்பட்டது. அப்போதே தோட்டக்கலைத்துறையினர்
சின்னவெங்காயம் அறுவடை தொடங்கியதும் விலை சரிந்து விடும் என மக்களுக்கு
.உறுதி அளித்தனர். எதிர்பார்த்தை போல் சின்னவெங்காயம் அறுவடை மாவட்டம்
முழுவதும் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. இதனைத்
தொடர்ந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ 40 ரூபாயாக குறைந்தது.
பல்லாரி வெங்காயம் விலை கிலோ 35க்கும் குறைந்தது. இதே
விலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும். இனிமேல் விலை உயர வாய்ப்புகள்
குறைவு என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர். இதேபோல் இரண்டு
மாதங்களுக்கு முன்னர் ஒன்று 10 ரூபாய்க்கு விற்ற எலுமிச்சை பழம் நேற்று ஒரு
ரூபாயாக சரிந்தது.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, 'பெரியகுளம், சோத்துப்பாறை, கண்ணக்கரை, அடுக்கம் மற்றும் தரைக்காடுகளில் அதிகளவில் எலுமிச்சை விளைச்சல் உள்ளதால் விலை குறைந்துள்ளது. ஒரு பழம் ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பழம் 25 ரூபாய் என குறைந்துள்ளது.' என்றனர்.

No comments:
Post a Comment