
டெல்லியில் ஷாஹீன் பாக் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு
(சிஏஏ) எதிராக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
குறித்து பா.ஜ.க எம்.பி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தென்கிழக்கு
டெல்லியில் ஷாஹீன் பாக் நகரில் ஒரு மாதத்துக்கும் மேலாக 200-க்கும்
மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்களுடன் இணைந்து
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து பா.ஜ.க எம்.பி பரவேஷ் சாஹிப் சிங் வர்மா சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அவர், ``டெல்லியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால்
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஷாஹீன் பாக் நகரில் போராடி வரும்
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு மணி நேரத்தில் அகற்றப்படுவார்கள். நடைபெற உள்ள
டெல்லி தேர்தல் என்பது வெறும் தேர்தல் மட்டும் அல்ல. இந்தத் தேசத்தின்
ஒற்றுமையைத் தீர்மானிக்கும் தேர்தலாகும். டெல்லியில் பா.ஜ.க ஆட்சிக்கு
வந்தால் ஒரு போராட்டக்காரரைக்கூட நாம் தெருக்களில் பார்க்க முடியாது.
அதேபோன்று அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள மசூதிகள் அனைத்தும்
ஒரு மாத காலத்துக்குள் அகற்றப்படும்.
குடியுரிமைச் சட்டத்துக்கு
எதிராகப் போராடி வரும் போராட்டக்காரர்கள் ஒரு முடிவை எடுத்துள்ளனர். அது
என்னவென்றால், அவர்கள் உங்களின் வீடுகளுக்குள் நுழைந்து உங்களின் தங்கைகள்,
மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்வார்கள். இதுதான் அவர்களின்
சிந்தனையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் பாலியல்
வன்கொடுமையாளர்கள், கொலைகாரர்கள். பா.ஜ.க- வுக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை
என்றால் உங்களைக் காப்பாற்ற பிரதமர் மோடியோ அமித் ஷாவோ வரமாட்டார்கள்'
என்று சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க
எம்.பி-யின் இந்தப் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. பலரும்
சமூக வலைதளங்களில் இவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment