
புது தில்லி: குடியுரிமை திருத்தச்
சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டங்களில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட
ஜே.என்.யு மாணவர் சர்ஜீல் இமாமுக்கு ஐந்து நாள் போலீஸ் காவல் விதித்து
தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார்
மாநிலம் ஜெகனாபாத்தைச் சேர்ந்தவர் சர்ஜீல் இமாம். இவர் தில்லி ஜவஹர்லால்
நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். இவர்
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில்
கலந்து கொண்டு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய வகையில்
பேசினார். இதனால் இவர்மீது அலிகார் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு
பதிவு செய்யப்பட் டிருந்தது.
இதே கருத்தை சமூக இணையதளத்திலும்
எழுகினார். இது வைரலாக பரவியது. இதையடுத்து இவர் மீது தேசத் துரோக
வழக்குப்பதிவு செய்யப்பட் டது. அசாமில் இவர் மீது சட்டவிரோத நடவடிக்கை
தடுப்பு சட்டத்தின் (ஊபா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும்,
பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உள்ள சர்ஜீல் இமாம் வீட்டில் காவல்துறையினர்
செவ்வாயன்று சோதனை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜே.என்.யு மாணவர் சர்ஜீல் இமாமுக்கு ஐந்து நாள் போலீஸ் காவல் விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிகாரில்
இருந்து புதன்கிழமையன்று தில்லி கொண்டு வரப்பட்ட இமாம் தில்லி நீதிமன்றம்
ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் . அவரிடம் விசாரணை நடத்த ஐந்து நாள் போலீஸ்
காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment