கேரளத்தில் இருந்து தமிழகத்தின் எல்லை வழியே உள்ளே இறைச்சிக்
கழிவுகளை லாரிகளில் அல்லது மூடப்பட்ட வேன்களில் எடுத்து வந்து, திருட்டுத்
தனமாக தமிழக நிலப் பகுதிகளில் கொட்டி விட்டுச் செல்வது கேரள இறைச்சிக்
கடைக்காரர்களுக்கே உரிய சதிவேலை.
இதனை அவர்கள் கேரளத்தில் தங்கள்
இடத்துக்குள் செய்ய மாட்டார்கள்; செய்தால் பெருமளவு அபராதம் கட்ட வேண்டும்!
தமிழகத்தில் இருந்து இறைச்சிக்கான கால்நடைகளைக் கொண்டு செல்வதும், பின்னர்
இறைச்சிக் கழிவுகளை தமிழகத்துக்கே திருப்பிக் கொண்டு வந்து கொட்டி
விட்டுச் செல்வதும் வாடிக்கை.
அவர்களை தமிழக எல்லையில் சோதனைச் சாவடிகளில் கண்காணித்து போலீஸார் நடவடிக்கை எடுப்பர்.
ஆயினும் அவர்களின் சோதனைக் கண்களில் இருந்தும் தப்பித்து
வந்து தமிழக மண்ணை நாசமாக்கி விட்டுச் செல்வதில் கேரளத்து இறைச்சி
வியாபாரிகள் கில்லாடிகள்.
ஆனால், இதனை மீறி, சபரிமலை செல்லும்
வழியில் இறைச்சிக் கழிவுகளை வேண்டுமென்றே கொட்டி, ஐயப்ப பக்தர்களின் மன
உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இப்போது
எழுந்துள்ளது.
மகர சங்கராந்தி - மகரவிளக்கு விழாவின் போது சபரிமலை
கோயிலின் இறைவன் சுவாமி ஐயப்பனின் விக்ரஹத்துக்கு அலங்கரிக்கப்பட வேண்டி,
அவரது புனித நகைகள் கொண்ட திருவாபரண பெட்டி ஏந்திய ஊர்வலத்தின் பாதையில்
இறைச்சி மற்றும் விலங்குகளின் உடல்களை வீசி எறிந்து
அசிங்கப்படுத்தியிருந்தனர் சிலர்!
புனித ஊர்வலத்துக்கு தீட்டு ஏற்படுத்தும் முயற்சியில், சமூக விரோத சக்திகள் இறைச்சி மற்றும் விலங்குகளின் உடல்களை ஊர்வலத்தின் பாரம்பரிய பாதையில், மந்திரம்-வடசேரிக்கரா சாலையில் கொட்டியிருந்தனர்.
புனித ஊர்வலத்துக்கு தீட்டு ஏற்படுத்தும் முயற்சியில், சமூக விரோத சக்திகள் இறைச்சி மற்றும் விலங்குகளின் உடல்களை ஊர்வலத்தின் பாரம்பரிய பாதையில், மந்திரம்-வடசேரிக்கரா சாலையில் கொட்டியிருந்தனர்.
ஊர்வலம் அந்த
இடத்தை அடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், பஞ்சாயத்து உறுப்பினர்கள்
தலைமையிலான பக்தர்கள் குழு ஒன்று அங்கு விரைந்து வந்து சாலையைக் கழுவியது.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் இந்துக்களிடையே பரவலான அதிர்ச்சியையும்
சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஊர்வலம் கடந்து செல்லும் வரை சாலையில் இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்ய தடை விதித்து பஞ்சாயத்து செயலாளரால் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, பல இஸ்லாமிய - கம்யூனிஸ்ட் கட்சியினர், சமூக ஊடக தளங்களில் கருத்துகளைப் பதிவு செய்தனர். எனவே, இந்த சகிப்புத்தன்மையற்ற வகுப்புவாதக் குழுக்களின் உறுப்பினர்களே இவ்வாறு சாலையில் இறைச்சியைக் கொட்டியிருக்கின்றனர் என்று நம்பப்படுகிறது.
உள்ளூர் நிர்வாக குழுக்களின் ஒத்துழைப்புடன், இந்தப் பகுதியில் பல அங்கீகரிக்கப்படாத மற்றும் சுகாதாரமற்ற இறைச்சி-மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. முன்னதாக, சபரிமலைக்கான பாரம்பரிய வழித்தடத்தில் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள் புனித யாத்திரை காலத்தில், குறிப்பாக திருவாபரண புனித ஊர்வலத்தின் போது இறைச்சிக் கடைகள் மூடப்படுவதைக் கவனித்தனர்.

ஆனால் இப்போது
பெரும்பான்மையான இறைச்சி விற்பனையாளர்கள் இவ்வாறு தங்கள் இறைச்சிக் கடைகள்
மூடப் படுவதை விரும்பவில்லை. எனவே, புனித ஊர்வலத்தை மதிக்கவில்லை. சில
ஆண்டுகளாகவே தங்கள் ஸ்டால்களை மூட மறுப்புத் தெரிவித்து வந்தனர் என்பதால்,
இந்த ஆண்டு பஞ்சாயத்து இது தொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது என்கிறார்கள். இந்தச் செய்தி கேரளத்தில் சபரிமலை
பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் வருத்தத்தையும்
ஏற்படுத்தியிருக்கிறது!

No comments:
Post a Comment