திருவனந்தபுரம்: கேரளாவில் வீடு
இல்லாதவர்கள் உட்பட மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் ரேஷன் கார்டு
வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் அமைச்சரவை கூட்டத்துக்கு பின் கேரள முதல்வர் பினராயி
விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த புத்தாண்டு முதல் 12 புதிய
திட்டங்களை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ேகரளாவில்
வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.
வீடு இல்லாதவர்களுக்கும், வீட்டுக்கு நம்பர் இல்லாதவர்களுக்கும் ரேஷன்
கார்டுகள் கிடைக்கும்.
தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு எல்லா முக்கிய நகரங்களிலும் சுத்தமான, பாதுகாப்பான தங்கும் வசதி ஏற்படுத்தப்படும். இங்கு காலை உணவும் கிடைக்கும். உள்ளாட்சி அமைப்புகள்தான் இதை நிர்வாகிக்கும். கேரளா முழுவதும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். பெட்ரோல் பல்குகளில் உள்ள கழிப்பறைகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் வசதி ஏற்படுத்தப்படும். 3,000 பேருக்கு ஒன்று என்ற நிலையில் மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பொதுக்கழிப்பறைகள் கட்டப்படும்.
மாநிலத்தில் தெருவிளக்குகள் முழுவதும் எல்இடி பல்புகளாக மாற்றப்படும். மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ளதுபோல பகுதி நேர வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். நீண்டதூரம் பயணம் செய்பவர்களுக்கு வழியோரங்களில் ஓய்வறைகள் கட்டப்படும். இதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டிற்குள் இந்த பணிகள் நிறைவடையும். கேரளாவில் 37 கோடி மரக்கன்றுகள் நடப்படும். மே மாதத்திற்குள் பெரும்பாலும் அனைத்து சாலைகளும் சிறப்பான வகையில் சீரமைக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அனைத்து தாலுகாக்களிலும் அதாலத்துகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment