புதுடில்லி: நிர்பயா வழக்கில் வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு
குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை திஹார் சிறை
நிர்வாகம் செய்து வருகிறது.இது தொடர்பாக திஹார் சிறைத்துறை அதிகாரிகள்
கூறுகையில், தூக்கில் போடுபவரை அனுப்பி வைக்கும்படியும், தூக்கில் போடும்
நாள் மற்றும் நேரத்தை விளக்கியும் உ.பி., சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடிதம்
எழுத உள்ளோம். மீரட் சிறையில், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணியில் உள்ள
நபரை அனுப்பி வைக்க கோரிக்கை விடுக்க உள்ளோம். 4 குற்றவாளிகளை தூக்கில்
போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. என்றனர். 4
குற்றவாளிகளுக்கும், திஹார் சிறையில் அறை எண் 3ல், காலை 7 மணிக்கு தூக்கில்
நிறைவேற்றப்பட உள்ளது.மீரட் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் ஊழியரான
பவன் கூறுகையில், குற்றவாளிகளை தூக்கில் போட நான் தயார்.
இதுவரை சிறைத்துறை அதிகாரிகள் யாரும் என்னை தொடர்பு
கொள்ளவில்லை. தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு வந்தால், நிச்சயம்
செல்வேன். தூக்கில் போடுவது, எனக்கும், நிர்பயாவின் பெற்றோருக்கும்,
அனைவருக்கும் நிம்மதியை கொடுக்கும் என்றார்.

No comments:
Post a Comment