புவனேஸ்வர்: இந்தியப் பொருளியல் சேவை எனப்படும் ஐஇஎஸ் - 2019 தேர்வில் ஒடிஸாவைச் சேர்ந்த இளைஞர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியப்
பொருளியல் சேவை - 2019 தேர்வுக்கான முடிவுகள் ஜனவரி 10ம் தேதி வெளியாகின.
இதில், புவனேஸ்வரத்தைச் சேர்ந்த அன்ஷுமான் கமிலா முதலிடம் பிடித்துள்ளார்.
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ம் ஆண்டில் நடத்திய ஐஇஎஸ் தேர்வில்
32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒடிஸாவைச் சேர்ந்த அன்ஷுமான்
கமிலா ஒருவர் மட்டுமே அந்த மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய
அளவில் முதலிடம் பிடித்த அன்ஷுமான் கமிலாவுக்கு மத்திய பெட்ரோலியம்
மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment