புதுடெல்லி: வருமான வரிவிலக்கு
உள்ளிட்ட சலுகை கிடைப்பதால், மக்களவை தேர்தலுக்கு பின் 180 புதுக்கட்சிகள்
பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுப்புது கட்சிகள்
பதிவு செய்யப்படுவதால், தேர்தல் ஆணையத்தை இக்கட்சிகள் தலைசுற்ற வைப்பதாக
புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின்
பதிவுகளின்படி, 1,334 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இருந்தன. அவற்றில் 6
அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளும், அங்கீகரிக்கப்பட்ட 53 மாநிலக்
கட்சிகளும் 2012ம் ஆண்டு பட்டியலில் இருந்தன.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே 2019ம் ஆண்டில், பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 2,300-ஐ தாண்டியது. ஒவ்வொரு நாளும் புதுப்புது அரசியல் கட்சிகள் உருவாகி தேர்தல் ஆணையத்தில் தங்களது கட்சிக்கு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்து வருகின்றன. கடந்தாண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 180 புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 30 புதிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளன. புதிய அரசியல் கட்சிகள் பதிவுகள் அதிகமாவதை அரசியல் நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் நிர்வாகிகள் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: அரசியல் கட்சிகள் வரி விலக்கு அளிக்கும் சட்டத்தை முழுமையாக அனுபவிக்கின்றன. இதனால் ஏராளமான கட்சிகள் புதிதுபுதிதாக முளைக்கின்றன. அவர்கள் எந்த நன்கொடை பெற்றாலும், அரசியல் கட்சிகளின் வருமானம், வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதுதான் புதிய கட்சிகள் துவங்குவதற்கான முக்கியமான காரணம். ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணைய கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கும் சட்ட அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதினோம்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை. பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் கிட்டத்தட்ட 25 சதவீதம் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகின்றன. 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, ஆறு தேசிய மற்றும் 39 மாநில அளவிலான கட்சிகள் உட்பட 464 கட்சிகள் போட்டியிட்டன. அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சேர்ந்த 6,434 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 98 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இதேபோன்ற நிலைதான் காணப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், 'அங்கீகரிக்கப்படாத பெரும்பாலான கட்சிகள் மறைமுக நோக்கங்களைக் கொண்டுள்ளன. சிலர் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அவர்கள் நன்கொடைகளை சேகரித்து வரி விலக்கு அனுபவிக்க முடியும். சில நேரங்களில், பெரிய கட்சிகள் இந்த சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட உள்கட்டமைப்பை பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவின் போது பயன்படுத்துகின்றன. ஏனெனில் தேர்தல் நேரத்தில் வாகனங்கள் பயன்படுத்துவதற்கான வரம்பு காரணமாக, சிறு கட்சிகள் தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. அதிகளவில் புதுப்புது கட்சிகள் பதிவு செய்வதால், அவற்றை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தேர்தலிலும் போட்டியிடாமல் வெறும் கட்சியை மட்டும் துவக்கி, வரிவிலக்கு சலுகைகளை அனுபவித்து வரும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க புதிய வழிமுறைகளை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

No comments:
Post a Comment