செங்கல்பட்டு அருகே ராணுவ வெடிகுண்டு ஒன்றை வீட்டுக்கு எடுத்துச்
சென்றபோது தவறி விழுந்து வெடித்ததில் இருவர் மருத்துவமனையில்
அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில்
நடைபெற்ற இரண்டாவது வெடிகுண்டு சம்பவம் இது.

செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் வசிப்பவர் ராமகிருஷ்ணன்.
அங்கு உள்ள ராணுவப் பயிற்சி மையத்துக்கு அருகில்
இவருக்குச் சொந்தமான விவசாயம் நிலம் உள்ளது. வழக்கம்போல் இன்று தன்னுடைய
விவசாய நிலத்துக்குச் சென்றார். நிலத்தை சுற்றிப் பார்த்துவிட்டு
வீட்டுக்குக் கிளம்பும்போது அங்கு குண்டு ஒன்று இருந்ததைக் கண்டார்
ராமகிருஷ்ணன். உடனே அதை எடுத்தவர் தன் இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில்
அதை வைத்துக் கொண்டார். அனுமந்தபுரம் சாலையில் செல்லும்போது வாகனத்தில்
வைத்திருந்த அந்தக் குண்டு தவறி கீழே விழுந்து வெடித்தது.
இதில்
ராமகிருஷ்ணனுக்கு கால், கை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும்
வெடிகுண்டு சிதறியதில் சாலையோரத்தில் அயர்னிங் கடையில் வேலை செய்து
கொண்டிருந்த கோவிந்தம்மாள் என்பவரின் மீதும் வெடிகுண்டு துகள்கள் பாய்ந்தன.
அவரின் மார்புப் பகுதியில் வெடிகுண்டின் பாகங்கள் தைத்தன.
வெடிச்சத்தம்
கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு செங்கல்பட்டு
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு
விரைந்த காவல்துறையினர் வெடித்த பாகங்களைச் சேகரித்து சோதனைக்கு எடுத்துச்
சென்றனர்.
`தங்க நகைக்கடை என நம்பிச் சென்றார்கள்!'- துப்பாக்கியோடு வந்தவர்களுக்குத் திருப்போரூர் தந்த அதிர்ச்சி
அனுமந்தபுரத்தில்
வனப்பகுதி அருகே உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு முன்புவரை பயிற்சிகள் நடைபெற்றுவந்தன. பயிற்சியின்போது
மலைப்பகுதிகள் புதர்கள் என வெடிகுண்டுகள் விழுந்து வெடிக்கும். சில
குண்டுகள் வயல்வெளிக்குப் பக்கத்திலும் விழும். ஒரு சில வெடிக்காத சில
குண்டுகளும் அங்கே இருந்துவிடும். வெடித்துச் சிதறிய பாகங்களை அப்பகுதியில்
ஆடு, மாடு மேய்ப்பவர்கள் எடுத்துச் சென்று இரும்புக் கடைகளில்
போட்டுவிடுவார்கள்.
சம்பவம்
அறிந்து அப்பகுதிக்கு வந்த செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் அப்பகுதியில் ஆய்வு
செய்தார். ``இதுபோன்று மர்மப் பொருள் கிடைத்தால் காவல்துறைக்குத் தகவல்
சொல்ல வேண்டும். யாரும் கையில் எடுத்து சோதிக்க வேண்டாம்" என அப்பகுதியில்
உள்ளவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
கடந்த சில மாதங்களுக்கு
முன்பு திருப்போரூர் அருகே உள்ள மானாம்பதி கிராமத்தில் குளப்பகுதியில்
கண்டெடுத்த குண்டுகளை எடுத்து விளையாடியபோது தவறி விழுந்து வெடித்து இரண்டு
இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், அங்கு வெடிக்காத நிலையில் ஒரு
வெடிகுண்டும் கைப்பற்றப்பட்டது.

No comments:
Post a Comment