
சுந்தர் பிச்சைக்கு வருடத்துக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்
மற்றும் 240 மில்லியன் டாலர் கூகுள் நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படும்
என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள்
நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்த சுந்தர் பிச்சை சில தினங்களுக்கு முன்பு
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டையும் கவனிப்பார் என்று
அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவருக்கான சம்பளம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆல்ஃபெட் நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தைக்கு புதிய சி.இ.ஓ பற்றியும்
அவருக்கான சம்பளம் பற்றியும் தெரிவித்துள்ளது. அதில், அவருக்கு ஆண்டுக்கு 2
மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 14.2 கோடி) வழங்கப்படும்
என்றும் இதனுடன் அவருக்கு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நிறுவனத்தின்
150 மில்லியன் டாலர் பங்குகளும், இதனுடன் நிறுவனத்தின் செயல்பாடு அவருக்கான
இலக்கை அடைவதைப் பொருத்து கூடுதலாக 90 மில்லியன் டாலர் பங்குகள்
வழங்கப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment