புதுடில்லி: குடியுரிமை சட்டம் குறித்து மலேஷிய பிரதமர் மஹாதீர் முகமது
தெரிவித்த கருத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம்,
குடியுரிமை சட்டம் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்த
சட்டம், எந்த குடிமகனின், குடியுரிமையை பாதிக்காது என தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம்
நடந்து வருகிறது. போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோலாலம்பூரில் நடந்த மாநாட்டுக்கு பின்னர் மஹாதீர் முகமது
கூறும்போது, 70 ஆண்டுகளாக, இந்தியர்கள் ஒற்றுமையாக வாழும் போது, குடியுரிமை
சட்டத்தின், அவசியம் என்ன?
மதச்சார்பற்ற நாடாக கூறும் இந்தியாவில், முஸ்லிம்களின்
குடியுரிமையை பறிக்கும் செயல் வருத்தத்திற்கு உரியது. இதனை இங்கு
செயல்படுத்தினால் என்ன ஆகும்? என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது.
குழப்பமும், நிலையற்ற தன்மையும் ஏற்படும்.
அனைவரும் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறினார். இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை : மீடியா தகவல்கள்படி, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து மலேஷியா பிரதமர், மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். 3 நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு, விரைவாக குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் அனுமதி வழங்குகிறது. குடியுரிமை சட்டம், எந்த குடிமகனின் தகுதியையும் பாதிக்காது.
குடியுரிமையை பறிக்காது. மலேஷிய பிரதமரின் கருத்து முற்றிலும் உண்மையில்லை. உண்மையை புரிந்து கொள்ளாமல், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து மலேஷியா கருத்து தெரிவிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment