டெல்லி: துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 11000 மெட்ரிக்
டன் வெங்காயம் வரும் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி துவகத்திலோ வந்து
சேரும் என மத்திய நுகர்வோர்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல்
முன்னதாக எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டள்ள 6090 மெட்ரிக் டன்
வெங்காயம் வரும் டிசம்பர் மத்தியில் வந்து சேரும் என்றும் மத்திய அரசு
தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்னும் மூன்று வாரங்களுக்கு பிறகு
வெங்காயம் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என தெரிகிறது.
முன்னதாக
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட
வெள்ளத்தால் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெங்காயம் அதிகம்
விலையும் மாநிலங்களில் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது இதனால்
அடுத்த மூன்று மாதங்களில் வெங்காய விலை மோசமாக குறைந்துவிடும் என்று
செப்டம்பர் மாதமே கணிக்கப்பட்டது.
வெங்காயம் விலை
கட்டுப்பாடு விதிப்பு
கட்டுப்பாடு விதிப்பு
ஆனால்
கிலோ ரூ.100ஐ தாண்டிய நிலையிலேயே வெங்காய இறக்குமதி குறித்து
விழிப்புணர்வு பிறந்தது. இதன் காரணமாக கடந்த சில வாரம் முன்பு தான் அரசு
வெங்காய ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்ததுடன், இறக்குமதிக்கு அனுமதித்து.
3 மாத பயிர்
விரைவில் வரும்
விரைவில் வரும்
இதனால்
வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. வெங்காய விலை
குறைவதற்கு குறைந்த பட்சம் இந்த மாதம் முடிய வேண்டும் என்கிறார்கள்
வியாபாரிகள். வெங்காயம் மூன்று மாதங்களில் வந்துவிடக்கூடிய பயிர் என்பதால்
வெங்காய விலை உயர்ந்துள்ளதால் பலரும் பயிரிட்டுள்ளார்கள் என்பதால் விலை
குறையும் என்கிறார்கள்.
துருக்கி வெங்காயம்
எகிப்து வெங்காயம்
எகிப்து வெங்காயம்
இதனிடையே
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 11000 மெட்ரிக் டன்
வெங்காயம் வரும் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி துவகத்திலோ வந்து சேரும்
என மத்திய நுகர்வோர்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் எகிப்தில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்டள்ள 6090 மெட்ரிக் டன் வெங்காயம் வரும்
டிசம்பர் மத்தியில் வந்து சேரும் என்றும் தெரிவித்துள்ளது.
அதிக விலை
விவசாயிகள்
விவசாயிகள்
இது
ஒரு கொடுமை என்னவென்றால் வெங்காயம் விலை உயர்ந்ததால் விவசாயிகள் இப்போது
அதிக அளவு பயிரிட்டு வருகிறார்கள். பின்னாளில் விலை இல்லாத சூழல் ஏற்படும்
போது நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள். அப்போது அவர்களுக்கு குறைந்த பட்ச
விலை கொடுத்து அரசு அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின்
எதிர்பார்ப்பு.
source: oneindia.com
No comments:
Post a Comment