
மதுரை பேச்சியம்மன் படித்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா.
அரசு இராசாசி மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் செவிலியர் உதவியாளராக
பணியாற்றி வருகிறார்.

இந்த
நிலையில், சில நாள்களுக்கு முன்பு அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த
நோயாளியிடம் பணம் கேட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. பிறந்த குழந்தையை
எடுத்துவந்து காட்ட உறவினர்களிடம் ஆயிரம் ரூபாய் அவர் லஞ்சம் கேட்டதாகத்
தெரிகிறது.
அவர்
லஞ்சம் கேட்டவர்கள், மருத்துவமனை முன்னாள் ஊழியரின் உறவினர் என்பதால்
மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் பற்றி 3 பேர்
கொண்ட மருத்துவ விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட
கார்த்திகாவிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அதிலிருந்து கார்த்திகா
மனவேதனை அடைந்திருக்கிறார். அவர் பணியிட மாறுதல் செய்யப்பட இருப்பதாகவும்
தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று காலை கார்த்திகா, தன்னுடைய வீட்டில்
தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளது அவர் குடும்பத்தினருக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஒருமுறை மருத்துவமனையில்
நெருக்கடி கொடுப்பதாகக் கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்
கார்த்திகா. பணி மாறுதலும் கேட்டிருக்கிறார்.
இந்த
நிலையில் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து திலகர்
திடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.
No comments:
Post a Comment