மதுரை: மனுத்தாக்கல்... மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி
தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற
மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது
தொடர்பான பொதுநல மனுவில், கடந்த 9ம் தேதி மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டிருப்பதாகவும்,
மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு
வெளியிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வமைப்புகளுக்கும்
தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என
தெரிவித்துள்ள மனுதாரர், 15 நாட்களுக்குள் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில்
கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:
Post a Comment