
பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சையாகப் பேசியதாக நெல்லை
கண்ணன் மீது பாஜகவினர் அளித்த புகாரில் போலீஸார் வழக்குப் பதிவு
செய்துள்ளனர். இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை கண்ணன்
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடியுரிமைச்
சட்டத்துக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில்
பேச்சாளர் நெல்லை கண்ணன் பிரதமர், உள்துறை அமைச்சர் பாதுகாப்பு குறித்து
சர்ச்சையாகப் பேசியது பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இடையே எதிர்ப்பலையை
ஏற்படுத்தியது. அவர் வீட்டு முன் காலையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
அதற்கு
முன் பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நெல்லை கண்ணன் மீது 3
பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் அவர் மதுரை,
வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு
இந்து அமைப்புகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பாளையங்கோட்டை
அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் பிரச்சினை ஏற்படவே மதுரையில்
உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment