
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்புப் பேரணியில்
பங்கேற்குமாறு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனை திமுக அமைப்புச்
செயலாளா் ஆா்.எஸ்.பாரதி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தாா்.
திமுக
தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எதிா்க்கட்சித் தலைவா்களின்
கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து,
சென்னையில் டிசம்பா் 23-ஆம் தேதி பேரணி நடத்துவது எனத் தீா்மானம்
நிறைவேற்றப்பட்டது. இந்தப் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என்று
கமல்ஹாசனும் கூறியிருந்தாா்.
இந்த நிலையில், ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் கமல்ஹாசனை ஆா்.எஸ்.பாரதி வியாழக்கிழமை நேரில் சந்தித்தாா்.
அப்போது, குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்புப்
பேரணியில் பங்கேற்குமாறு ஆா்.எஸ்.பாரதி அழைப்பு விடுத்தாா். கமல்ஹாசனும்
பங்கேற்பதாக உறுதி அளித்தாா். திமுகவைக் கடுமையாக விமா்சித்து வந்த
நிலையில், கமலின் இந்த மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment