
குடியுரிமை சட்டத்திருத்த போராட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும்
போராட்டங்கள் வெடிக்கின்றன. இந்த சட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிராக
இருப்பதாகக் கூறி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
எத்தனை போராட்டங்கள் நடந்தாலும், அந்த சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது
என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இருப்பினும், போராட்டங்கள்
நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை ஆலந்தூரிலிருந்து ஆளுநர் மாளிகை
வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், ஆளுநர் மாளிகை வரை செல்வதற்கு காவல்துறை அனுமதி
அளிக்கவில்லை. அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான மக்கள் தங்களது
குடும்பங்களுடன் பேரணியில் கலந்து கொண்டனர். இதில், மனித நேய மக்கள் கட்சி
பொதுச்செயலர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலந்தூர்
போக்குவரத்து பணிமனையில் இருந்து அக்கோ காலணி வரை சுமார் 1 கிலோ மீட்டர்
தூரம் வரை 650 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை கையில் ஏந்திய படி பேரணி
நடத்தினர். அதில், " குடியுரிமை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்
காட்டக்கூடாது" என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.அதன் பின்னர், அங்கு
நடைபெற்ற கூட்டத்தில், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்கள்
மற்றும் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுவதால் அதனை மத்திய அரசு திரும்பப்
பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment