டெல்லியில் ராணி ஜான்சி சாலை பகுதியில் அனாஜ் மண்டி என்ற இடத்தில்
தொழிற்சாலை ஒன்றில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக 30க்கும் மேற்பட்ட
தீயணைப்பு வாகனங்கள் சென்றன. அவற்றில் இருந்த 150 தீயணைப்பு துறை வீரர்கள்
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 43 பேர்
பலியானார்கள்.
இச்சம்பவம் பற்றி
அறிந்த வடகிழக்கு டெல்லி பா.ஜ.க. எம்.பி.யான மனோஜ் திவாரி உடனே தீ விபத்து
நடந்த பகுதிக்கு சென்றார். அவர் கூறியது , பா.ஜ.க. சார்பில் உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும்
இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என கூறினார்.
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
தலைமையிலான அரசு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும்,
காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என
தெரிவித்தது.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து
ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது. விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டு, ஒரு
வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறியது. தொழிற்சாலை உரிமையாளர்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டது.
தீ விபத்து நடந்த கட்டிட உரிமையாளர் ரேஹான் கைது செய்யப்பட்டார். கைது
செய்யப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர் ரேஹான் மற்றும் மேலாளர் பர்கான் ஆகியோர்
தீஸ் ஹஜாரி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு
விசாரணை மேற்கொள்வதற்காக 14 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment