
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, சர்க்கரை அட்டையை
அரிசி அட்டையாக மாற்றுவது இன்றுடன் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிகிறது.
பொது
விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் சர்க்கரை மட்டும் பெரும் குடும்ப
அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி வாங்கக் கூடிய குடும்ப அட்டையாக மாற்ற
கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. பின்பு இதனை 3 நாட்கள்
நீட்டிக்கப்பட்டது. தற்போது குடும்ப கார்டுகளாக மாற்ற இன்றுடன் காலவகாசம்
முடிவு அடைகிறது.
இந்நிலையில், மாற்ற
விரும்பு பயனாளர்கள் விண்ணப்பத்துடன் ஸ்மார்ட் கார்டு-யின் ஜெராக்ஸ்
எடுத்துக் கொண்டு வட்டவழங்கல் அலுவலரிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
அல்லது ஆன்லைன் மூலம் http://tnpds.gov.in
என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள்,
உடனடியாகப் பரிசீலனை செய்யப்படும். பின்பு சர்க்கரை வாங்கும் குடும்ப
அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி வாங்கும் குடும்ப அட்டைகளாக மாற்றம்
செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment