
யார் போனாலும் போகட்டும் என்று தெனாவெட்டாகப் பேசிய டிடிவி தினகரனை
இப்போது காணவே முடியவில்லை. ஏனென்றால், தினமும் கட்சியில் இருந்து வெளியே
போனவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமனம் செய்வதற்கே அவருக்கு இப்போது
நேரம் போதவில்லை. ஏனென்றால், தினமும் பலர் வெளியேறிக்கொண்டே
இருக்கிறார்கள்.
அந்த வகையில் முன்னாள்
அமைச்சர் கே.டி.பச்சைமாலும் தினகரனுக்கு டாட்டா காட்டிவிட்டுப்
போய்விட்டார். உடனே டென்ஷன் ஆன தினகரன் இன்று, கழக அமைப்புச்செயலாளர்
மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும்
கே.டி..பச்சைமால் அவர்களும், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற
இணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் நாஞ்சில் முருகேசன் அவர்களும், அவரவர்
வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள்
என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இவர்கள் எப்போது ஓடப் போகிறார்களோ, இவர்களுக்கும் மாற்று ஆட்களை தயார் செஞ்சுக்கோங்க தலைவரே.
No comments:
Post a Comment