
மகா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு
சில இடங்களில் லேசானது முதல் விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
பரவலாக மழை பெய்து வருகிறது.மேலும் அரபிக் கடலில் கியார் புயலும்
,லட்சத்தீவு கடலில் 'மகா'புயலும் உருவாகியுள்ளது. முதலில் உருவான கியார்
புயல் தற்போது வலுவிழந்து வருகிறது.இதன் தீவிரமும் குறைந்துவிட்டது.
இதேபோல்
மகா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாற உள்ளது என்று
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முதலில் வடமேற்கு திசையில் நகர்ந்து,
பின்னர் மேற்கு வடமேற்கு திசையில் நகரும்.
இந்த புயல் எதிரொலியாக லட்சத் தீவு பகுதியில் கடல்
சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில்
கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் மகாவின் காரணமாக தமிழகம் மற்றும்
புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் விதமான மழைக்கு வாய்ப்பு
உள்ளது.நீலகிரியில் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது
என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment