திருமாவளவனை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை நடன இயக்குனர் காயத்ரி
ரகுராம் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
தமிழில்
ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்
நடிகர் இயக்குனர் காயத்ரி ரகுராம். காயத்ரிக்கும் விசிக கட்சி சார்ந்த
திருமாவளவனுக்கும் சமீபகாலமாகவே சமூகவலைதளத்தில் மோதல்கள் ஏற்பட்டு
வருகின்றன. அதன் உச்சகட்டமாக இன்றைய தினம் காயத்ரி ரகுராம் வெளியிட்ட
பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருமாவளவன் பேசிய அந்த வீடியோ பதிவை நடன
இயக்குனர் காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்
பதிவிட்டிருந்தார் . மேலும் அதற்கு கேப்சனாக "அடிங்க" என்று
குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த திருமாவளவனின் தொண்டர்கள் மிகவும்
ஆத்திரமடைந்து காயத்ரியை ஆபாசமான வார்த்தைகளால் கமெண்ட் செய்ய
ஆரம்பித்தனர்.
தன்னை ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு தக்க பதிலடியை நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் தன்னுடைய புதிய பதிவின் மூலம் தற்போது அளித்துள்ளார். திருமாவளவனை குறிப்பிட்டு என் முன்னால் இந்துக்களை பற்றி தவறாக பேச முடியுமா என்று சவால் விடுகிறேன் என்று கூறி இருக்கிறார். யார் என் மீது பாய்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன் எனவும் காயத்ரி குறிப்பிட்டிருக்கிறார்.
இவர்கள் பிக்காசோ ஓவியம் மற்ற வழிபாட்டுத் தலங்களையும் மதிப்பார்கள் ஆனால் இந்துக்கள் கலை என்றால் பாரபட்சம் காட்டுவார்கள். இவற்றை கட்டியது அனைத்தும் மனிதர்கள் தான் கடவுள் அல்ல என்றும் அந்த பதிவில் கூறியிருந்தார்.
மேலும் திருமாவளவன் ஆதரவாளர்களிடம் இருந்து தொடர்ந்து காயத்ரி ரகுராமிர்க்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். திருமாவளவனை எம்பி என்று கூறுவதற்கு வெட்கக்கேடு எனவும் காயத்ரி ரகுரம் அந்த பதிவில் பதிவிட்டிருக்கிறார் .
காயத்ரி ரகுராமன் இந்த பதிவை தொடர்ந்து திருமாவளவன் காயத்ரியின் உதவியாளரின் தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்புகொண்டு காயத்ரியை கண்டபடி திட்டி இருக்கிறார். தொடர்ச்சியாக ஆபாச பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் வரும் நவம்பர் 27ஆம் தேதி மெரினா கடற்கரையில் காலை 10 மணிக்கு தான் தனியாக வருவதாகும், ஒருவேளை திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்கொண்டு இந்துக்களை பற்றி தவறாக பேசித்தான் பார்க்கட்டும் என்றார்.
மேலும் உங்களைப் போன்று வெறி பிடித்தவர்களின் மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். எனது இந்து மதத்திற்காகவும் இந்தியாவுக்காகவும் நான் சாக கூட தயார்எனவும் காயத்ரி அவருடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். காயத்ரியின் இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த
சில நாட்களுக்கு முன்பாக திருமாவளவன் மேடையில் பேசி இருந்தபோது
இந்துக்களைப் பற்றியும் இந்து கோயில்களில் இருக்கும் சிலைகளை பற்றியும் பல
சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல தரப்பினரிடமிருந்தும் இதற்கான
எதிர்ப்பு கிளம்பியதால் சம்பவம் குறித்து மன்னிப்பும் கோரினார்.
இருப்பினும் திருமாவளவன் பேசிய அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில்
வைரலாக பரவி வருகிறது.
தன்னை ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு தக்க பதிலடியை நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் தன்னுடைய புதிய பதிவின் மூலம் தற்போது அளித்துள்ளார். திருமாவளவனை குறிப்பிட்டு என் முன்னால் இந்துக்களை பற்றி தவறாக பேச முடியுமா என்று சவால் விடுகிறேன் என்று கூறி இருக்கிறார். யார் என் மீது பாய்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன் எனவும் காயத்ரி குறிப்பிட்டிருக்கிறார்.
இவர்கள் பிக்காசோ ஓவியம் மற்ற வழிபாட்டுத் தலங்களையும் மதிப்பார்கள் ஆனால் இந்துக்கள் கலை என்றால் பாரபட்சம் காட்டுவார்கள். இவற்றை கட்டியது அனைத்தும் மனிதர்கள் தான் கடவுள் அல்ல என்றும் அந்த பதிவில் கூறியிருந்தார்.
மேலும் திருமாவளவன் ஆதரவாளர்களிடம் இருந்து தொடர்ந்து காயத்ரி ரகுராமிர்க்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். திருமாவளவனை எம்பி என்று கூறுவதற்கு வெட்கக்கேடு எனவும் காயத்ரி ரகுரம் அந்த பதிவில் பதிவிட்டிருக்கிறார் .
காயத்ரி ரகுராமன் இந்த பதிவை தொடர்ந்து திருமாவளவன் காயத்ரியின் உதவியாளரின் தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்புகொண்டு காயத்ரியை கண்டபடி திட்டி இருக்கிறார். தொடர்ச்சியாக ஆபாச பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் வரும் நவம்பர் 27ஆம் தேதி மெரினா கடற்கரையில் காலை 10 மணிக்கு தான் தனியாக வருவதாகும், ஒருவேளை திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்கொண்டு இந்துக்களை பற்றி தவறாக பேசித்தான் பார்க்கட்டும் என்றார்.
மேலும் உங்களைப் போன்று வெறி பிடித்தவர்களின் மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். எனது இந்து மதத்திற்காகவும் இந்தியாவுக்காகவும் நான் சாக கூட தயார்எனவும் காயத்ரி அவருடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். காயத்ரியின் இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment