
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் நாளை முதல் பிரேத
பரிசோதனையில் ஈடுபட மாட்டோம் என போராட்டம் நடத்தும் மருத்துவர்கள்
அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில்
மருத்துவ பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி
அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.25) முதல்
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
இதனால்
மருத்துவமனையில் நோயாளிகள் அவதியுறும் சூழல் நிலவுகிறது. இன்று மாலைக்குள்
பணிக்கு திரும்பாவிட்டால் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என சுகாதாரத்
துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி
அரசு மருத்துவமனையில் நோயாளிகள் செல்லக் கூடிய பாதையான படிக்கட்டை அடைத்து
மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி அரசு
மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம் என
மருத்துவர்கள் தெரிவித்தனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment