
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வந்த எச். ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தபோவதாகவும், திராவிடர் கழக கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வது மு.க.ஸ்டாலின் குடும்பத்தினார்தான் என்று குற்றம்சாட்டிய எச். ராஜா வேளச்சேரியில் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தி வரும் "சன்ஷைன் மாண்ட்டி சோரி, சன் சைன் ஹையர் செகண்டரி" பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.
தமிழில் பேசினாலே அபராதம் விதிக்கும் திமுக மூத்த தலைவர் அன்பழகன் பேரன் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளி முன்பும் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்த எச்.ராஜா இந்தியை எதிர்ப்பதா கூறும் இவர்கள் தமிழ் உணர்வாளர்கள் இல்லை. தமிழ் விரோதிகள் என கடுமையாக சாடினார்.
மேலும் திமுக தலைவர்கள் நடத்தும் 45 சிபிஎஸ்இ சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்த எச்.ராஜா, சமச்சீர் கல்வியை கொண்டு வந்த தி.மு.க.வினர் தான் சமச்சீர் கல்வியை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சென்னையில் பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் எச்.ராஜா
No comments:
Post a Comment