Latest News

நாட்டை பிளவுபடுத்திடாதீங்க.. மக்களை இந்தி ஒருமைப்படுத்தி விடாது.. அமித்ஷாவுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் பாமகவும் உள்ளது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தமிழக நலன்களை விட்டுத் தர மாட்டோம் என்று அன்றும், இன்றும் தெளிவாக சொல்லி வருகிறார் டாக்டர் ராமதாஸ்.
இந்தி திணிப்பு விவகாரம் ஆகட்டும், ரெயில்வேயில் வேலை பார்ப்பவர்கள் இந்தியில் பேச வேண்டும் என்ற அறிவிப்பு ஆகட்டும், அஞ்சல்துறை தேர்வு ஆகட்டும், மத்திய அரசின் எந்தவித அறிவிப்பு வந்தாலும், அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் தலைவர்களில் ஒருவர் டாக்டர் ராமதாஸ்!

கருத்து
தாய்மொழி

இன்றும் அப்படித்தான் மூன்றே மூன்று ட்வீட் போட்டு அமித்ஷா கருத்து தவறானது என்று ஆணித்தரமாக எடுத்து சொல்லி உள்ளார். இந்தி தினத்தையொட்டி, அமித்ஷா தனது வாழ்த்து செய்தியில், "நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நம்முடைய தாய்மொழியை பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும், ஒருமொழியான இந்தியால் மட்டும்தான், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும்" என்று சொல்லி இருந்தார்.

தலைவர்கள்
கண்டனங்கள்

இந்த கருத்துக்கு தமிழக தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி டாக்டர் ராமதாசும் எதிர்ப்பு தெரிவித்து 3 ட்வீட்கள் போட்டுள்ளார். "இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறானது. இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப் பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது.
இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி அனைத்து மக்களையும் ஒருமைபடுத்தி விடாது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும். உலகின் பல நாடுகளில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
56 people are talking about this

அடையாளம்
கண்டிக்கத்தக்கது

உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது. இந்தியாவுக்கு இந்தியை அடையாளமாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களின் அடையாளங்களை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்க செயல் தானே?
இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறானது. இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப் பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது!
உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது. இந்தியாவுக்கு இந்தியை அடையாளமாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களின் அடையாளங்களை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்க செயல் தானே?
56 people are talking about this

இந்தி மொழி
பிளவு

இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி அனைத்து மக்களையும் ஒருமைபடுத்தி விடாது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும். உலகின் பல நாடுகளில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன," என்று பதிவிட்டுள்ளார்.
உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது. இந்தியாவுக்கு இந்தியை அடையாளமாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களின் அடையாளங்களை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்க செயல் தானே?
இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி அனைத்து மக்களையும் ஒருமைபடுத்தி விடாது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும். உலகின் பல நாடுகளில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
56 people are talking about this

கூட்டணி
வரவேற்பு

எந்த கூட்டணியில் இருந்தாலும் சரி, இந்தி திணிப்பினை எந்த ரூபத்திலும் ஏற்றுக் கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது என்ற நிலைப்பாட்டில் ராமதாஸ் என்றுமே உறுதியாக உள்ளார். அதனால்தான டாக்டரின் இந்த அதிரடி ட்வீட்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.