
இஸ்லாம் மதத்தில் எந்தப் பிரிவுக்கு மாறினார் என்பதை தெரிவிக்காததால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழை பெற உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த ரில்வான் என்பவர் ராம்ஜியா என்ற ஆதி திராவிட இன பெண்ணை திருமணம் செய்து கொண்டார்!இவர்களுக்கு ஹர்ஷத், ஹர்ஷிதா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்!
கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் இஸ்லாம் மதத்தை தழுவினார். அப்போது 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி திருக்கழுக்குன்றம் தாசில்தாருக்கு விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பத்தை நிராகரித்து செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ரில்வான்.
இந்த மனுவை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி இஸ்லாம் மதத்துக்கு மாறிய மனுதாரர் அந்த மதத்தில் எந்த பிரிவில் சேர்ந்து உள்ளார் என்பதை தெரிவிக்க வில்லை. அதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்க இயலாது என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இஸ்லாம் மதத்தில் எந்த பிரிவுக்கு மாறினார் என்பதை மனுதாரர் தெரிவிக்கவில்லை என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி சான்றிதழ் பெற அவருக்கு உரிமை இல்லை என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
சலுகை தேவைப்படும் இந்துவுக்கே சலுகைகள் தேவை! சலுகை தேடாத இந்துவுக்கு இவை தேவையில்லை. கிருத்துவ மதத்திலும், இஸ்லாமிலும் பிரிவுகள் இல்லையா? இந்து மத சாதியை காட்டி அதில் சேர்ந்த பின்னும் சலுகைக்காக பல பிரிவுகளை வைத்திருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர் இந்தத் தகவலை பகிர்ந்து கொள்ளும் சமூகவலைத்தளவாசிகள்!
No comments:
Post a Comment