
பெங்களூரு: கர்நாடகாவில், அக்.,21ல் இடைத்தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளிலும் மஜத போட்டியிடும் என அக்கட்சி தலைவர் தேவகவுடா கூறியுள்ளார்.கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக இருந்த போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பதவி விலகினர். இதனால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. காலியாக உள்ள இந்த 15 தொகுதிகளுக்கும் அக்., 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தள தலைவர் எச்டி தேவகவுடா கூறுகையில், இடைத்தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளிலும் மஜத போட்டியிடும் என ஏற்கனவே கூட்டணி அரசுக்கு தலைமை வகித்த குமாரசாமி அறிவித்துள்ளார். காங்கிரஸ் ஆதரவில் நடந்த ஆட்சியின் போது அவர் சந்தித்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்தார். இவ்வாறு அவர் கூறினார். மைசூரில் நடந்த மஜத கூட்டத்தில், குமாரசாமி பேசுகையில், இடைத்தேர்தல் நடக்க உள்ள அனைத்து தொகுதிகளிலும், வேட்பாளர்களை களம் இறக்கும் பணியை தேவகவுடா ஏறகனவே துவக்கிவிட்டார். இடைத்தேர்தல் நடக்கும் 15 இடங்களில் 8 முதல் 10 இடங்களில் குறைந்த பட்சம் கட்சி வெற்றியை குறிவைத்து உள்ளேன். என்றார்.
No comments:
Post a Comment