
ஜம்மு காஷ்மீரில் மக்களை சந்திக்கும் சுதந்திரத்தை மட்டுமே கொடுத்தால் எங்களுக்குப் போதுமானது என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரை இரண்டாக மத்திய அரசு பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. காஷ்மீரில் வன்முறைகள் வெடித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பதிலாக, ராகுல் காந்தி, நீங்கள் காஷ்மீருக்கு வாருங்கள்.. நான் உங்களுக்கு விமானத்தையும் அனுப்பி வ்வைக்கிறேன்.. நிலவரத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என காட்டமாக பதிலளித்திருந்தார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்.
சத்ய பால் மாலிக்குக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் அளித்த பதிலில். காஷ்மீரை வந்து பார்வையிட நீங்கள் விடுத்த அழைப்பை ஏற்கிறேன். நானும் எதிர்க்கட்சிகள் குழுவும் இதை ஏற்கிறோம்.
ஆனால் எங்களுக்கு உங்கள் விமானம் தேவையில்லை... தயவு செய்து நாங்கள் சுதந்திரமாக செயல்பட, மக்களை சுதந்திரமாக சந்திக்க, அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, ராணுவ வீரர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment