Latest News

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல்! டெல்லியில் ப.சிதம்பரம் கைது?

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப சிதம்பரத்தை டெல்லியில் சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை பெற உதவியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எடுத்து டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சென்றுள்ளது. அங்கு அவரை அவர்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ப சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் அவரது வீட்டு முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ப சிதம்பரம் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.