
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மற்றும் 35A பிரிவுகளை நீக்கும் மசோதாக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவிற்கு அதிமுக, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவை தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக மற்றும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
இந்நிலையில் இம்மசோதாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அக்கட்சியின் காங்கிரஸ் மாநிலங்களவை கொறடா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடா புவனேஸ்வர் கலிட்டா தனது ராஜிநாமா கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது காங்கிரசுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது ராஜிநாமா ஏற்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment