
இஸ்லாமாபாத்: இந்தியா உடனான வர்த்த உறவையும் ரத்து செய்துள்ள பாகிஸ்தான் இனி இந்தியாவுடன் எந்த உறவும் இல்லை என அறிவித்துள்ளது.
நிரந்தரமாக ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியுள்ளது. அத்தோடு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இருயூனியன் பிரதேசங்களாக உருமாற்றி அறிவித்துளளது.
இதற்கு பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் செயலுக்கு எதிராக முறையிடுவோம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரோஷி, பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஷ் கட்டாக் மற்றும் பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் இஸ்லாமாபாத்தில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் இந்தியாவுடனான அனைத்த ராஜாங்க உறவுகளையும் நிறுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தியாவுடன் இனி எந்த வர்த்தக உறவும் கிடையாது என்றும் முடிவு செய்யப்பட்டது.. இதன்படி இந்தியா பாகிஸ்தானில் உள்ள வர்த்தகர்கள் இனி வர்த்தம் மேற்கொள்ள முடியாது. இத்தோடு வாகா எல்லையையும் மூடுவதாக அறிவித்துள்ளதால் இத்துடன் பாகிஸ்தான் இந்தியா இடையேயான அனைத்து உறவுகளும் முடிவுக்கு வந்துள்ளது.
source: oneindia.com

No comments:
Post a Comment