
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பான இரண்டு மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டுள்ளது.
திங்களன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் மாநிலம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுகிறது.
அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும். லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் செயல்படும். லடாக் யூனியன் பிரதேசம், சட்டப்பேரவை இல்லாததாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடனும் செயல்படும்.
இவ்வாறு அறிவித்த அமித் ஷா இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ள உத்தரவையும் அவையில் வாசித்துக் காட்டினார்.
இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார். அதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பிற்கு பதிலாக பகுதி வாரியான வாக்குச்சீட்டு பதிவின் மூலம் மசோதா நிறைவற்றப்பட்டது. அதையடுத்து மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாயன்று மக்களவையில் மீண்டும் விவாதத்திற்கு மசோதாக்கள் கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment