
குழந்தை திருட்டை தடுப்பதில் அலட்சியம் காட்டும் அரசு மருத்துவமனைகள். சென்சார் கருவிகள் முடக்கத்தால் குழந்தைகள் கண்காணிப்பில் குளறுபடி நிலவுகிறது.
தென் மாவட்டத்தில் மிகப்பெரிய மருத்துவமனையாக கருதப்படகூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் திருடப்படுதாக எழுந்த புகாரையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்காணிப்பை தீவிரபடுத்தியது.
அதந்படி சென்சார் கருவிகள் பொறுத்த உத்தரவிட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சென்சார்கருவிகள் பொருத்தப்பட்டு முழுவதுமாக சிசிடிவி கேமிராக்கள் மூலமாக கண்காணிப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த பேருகால அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் உள்ள சென்சார் கருவிகள் செயல்படாமல் முடங்கியுள்ளது.
3அடுக்குகளை கொண்ட இந்த வார்டில் நாளொன்றுக்கு சுமார் 50 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது. மேலும் பச்சிளங்குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை, அறுவைசிகிச்சை மையம் உள்ளிட்ட வார்டுகள் செயல்படுவதால் 100க்கணக்கான பச்சிளங்குழந்தைகள் வருவதால் குழந்தைகளை சரியாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தை கடத்தலோ, குழந்தைகளை மாற்றினாலோ கண்டுபிடிக்கமுடியாத சூழலுக்கு தள்ளப்படும் நிலை உருவாகும். துமிழகம் முழுவதிலும் குழந்தை கடத்தல் விவகாரம் சில மாதங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு இயந்திரங்கள் முடங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் இது போன்ற அலட்சியத்தால் குழந்தை கடத்தல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது. குழந்தை கடத்தல் விவகாரங்களில் ஏற்கனவே பல்வேநு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குழந்தைகள் கண்காணிப்பின் முக்கிய உதவியாக இருக்ககூடிய சென்சார் கருவி முடங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து சர்ச்சையாகிய நிலையில் தற்போது சென்சார் கருவிகள் சீரமைக்கபடுவதாக மருத்துவமனை நிர்வாக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment