
சென்னை: பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது நான் அழுதேனா? என அமைச்சர் ஜெயகுமார் மைத்ரேயனுக்கு பதில் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 36-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எலக்ட்ரிக் கார்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், எலக்ட்ரிக் கார்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்க அளித்த பேட்டியில், எலக்ட்ரானிக், பேட்டரி கார்களுக்கு 5 சதவீத வரியை குறைக்க கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் 61 பொருட்களுக்கு வரி குறைப்பு, வரி விலக்கிற்கான கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
மேலும், தமிழ் மொழியைப் போன்ற தொன்மையான மொழி எதுவும் கிடையாது. பிளஸ் 2 வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை குறைத்து பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதற்காக நான் அழுதேனா? என கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயகுமார், பொறுப்பில் இல்லை என்றவுடன் கட்சியையும், கட்சியில் இருப்பவர்களையும் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.
No comments:
Post a Comment