
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பெங்களூருவில் உள்ள ஒட்டலில் நடந்தது.
கர்நாடகாவில் கடந்த வாரம் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சி சட்ட்சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் கவிழ்ந்தது. இதனால் கர்நாடகா முதல்வராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு கர்நாடகா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கப்போவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
207 ஆக சரிவு
உறுப்பினர்களின் எண்ணிக்கை
தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு 99 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. தற்போதையை நிலையில் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 207 ஆக குறைந்துள்ளது.
105 எம்எல்ஏக்கள்
பெரும்பான்மையை நிரூபிக்க
இதனால் 104 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தாலே எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நிலையில் தற்போது 105 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
நூலிழை மெஜாரிட்டி
சட்டசபைக்கு வராமல்
இந்நிலையில் நூலிழை மெஜாரிட்டியில் இருப்பதால் பாஜகவும் எம்எல்ஏக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நாளை எதிர்பாராதவிதமாக சில எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வராமல் போன அது எடியூரப்பா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும்.
பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்
பெங்களூருவில் கூட்டம்
இதன் காரணமாக கர்நாடகா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தை எடியூரப்பா இன்று கூட்டியுள்ளார் பெங்களூருவில் உள்ள சான்சேரி பாவிலியான் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 105 எம்எல்ஏக்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நாளை பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக எடியூரப்பா இவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நூலிழை மொஜரிட்டி என்பதால் இவர்களை அப்படியே பாதுகாப்பாக நாளை சட்டசபையில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா உள்ளார். இதனால் அனைவரையும் ஓட்டலுக்கு வரவழைத்துள்ளார்.
No comments:
Post a Comment