![]() |
எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் நிர்வாகச் செயலாளர் ஹாஜி எஸ்.ஜெ அபுல்ஹசன் |
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் போதிய மழையில்லாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க எம்.கே.என் மதரஸாவுக்கு சொந்தமான நிலத்தில் பைப் மூலம் தண்ணீர் கொண்டுவர நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் நிர்வாகச் செயலாளர் ஹாஜி எஸ்.ஜெ அபுல்ஹசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
'அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மழை இன்றி குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை போக்க எம்.கே.என் மதரஸாவுக்கு சொந்தமான சேண்டாக்கோட்டை கிராமத்திலிருந்து வரும் நிலத்தில் டி.ஐ பைப் மூலம் அதிராம்பட்டினம் நகருக்கு குடிதண்ணீர் கொண்டுவர எங்களிடம் அனுமதி கோரியதின் அடிப்படையில் தமிழ்நாடு வஃக்பு வாரியத்திற்கு கடிதம் மூலமும், நேரிலும் தெரிவித்தும், தஞ்சாவூர் வஃக்பு கண்காணிப்பாளருக்கு குடிதண்ணீர் பற்றாக்குறையை விளக்கியதின் பேரிலும் அனுமதி பெற்று எங்களிடம் அனுமதி கேட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி செயலர் அவர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment