
திரைப்பட இயக்குநர் ரஞ்சித் குறித்து, மிகவும் தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய அம்பி வெங்கடேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கினை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது
தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ரஞ்சித் தொடர்ந்த வழக்கோடு சேர்த்து, அம்பி வெங்கடேசனுக்கு எதிரான வழக்கையும் பட்டியலிடவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.
மதுரை கொடிக்குளம் மலைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த வீரன் என்ற விடுதலை வீரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அம்பி வெங்கடேசனுக்கு எதிரான மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் ரஞ்சித் சர்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சோழநாட்டு வேளாளர் சங்கத்தை சேர்ந்த அம்பி வெங்கடேசன் என்பவர், இயக்குநர் ரஞ்சித்தை மிகவும் தரக்குறைவாக பேசி உள்ளார். மேலும் அவர் சார்ந்த சமூகத்தை கூறி,மிகவும் இழிவாக பேசி உள்ளார். அம்பி வெங்கடேசனின் இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது
சக்கிலியர், பள்ளர், என்கிற சாதி பெயர்களை அருந்ததியர், தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என அரசாணை உள்ளது.
ஆனால், அம்பி வெங்கடேசன் என்பவர், இரு தரப்பினருக்கு இடையே விரோதம் விளைவிக்கும் வகையில் பேசி உள்ளார்.
எனவே அம்பி வெங்கடேசன் மீது SC/ST பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து நடவடிக்கை கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அருந்ததியர் சமூகத்தைப் பற்றியும், இயக்குநர் ரஞ்சித் குறித்தும் அவதூறாக பேசிய அம்பி வெங்கடேசன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என விடுதலை வீரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு தன் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குநர் பா.ரஞ்சித் தாக்கல் செய்துள்ள வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment