
புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் நிர்வாக குழு கூட்டம்
நாளை (ஜூன் 18 ) கட்சியின் மூத்த தலைவர் சோனியா இல்லத்தில் நடைபெற உள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 17 வது லோக்சபா கூட்டத்தொடர் தொடங்கியுள்ள
நிலையில், அவையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசை
எதிர்கொள்ளவேண்டிய முறைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், தற்போது காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவராக சோனியாவே தேர்வாகி
உள்ளார். எனினும், லோக்சபாவில் சென்ற முறை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ்
சார்பில் மல்லிகார்ஜூன கார்கே செயல்பட்டார். ஆனால்,இந்தமுறை அவர் தேர்தலில்
தோற்றுப்போனார். எனவே, இந்தமுறை காங்கிரஸ் சார்பில் லோக்சபா தலைவரை நாளைய
கூட்டத்தில் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment