
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த முரளிரம்பா சிபிஐ பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரை மாநகர் போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் பாலகோபாலன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதிய எஸ்பிக்கு முரளி ரம்பா பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் பொறுப்புகளை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் கலநது கொண்டனர்.
No comments:
Post a Comment